அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாவிஷேகத்தை முன்னிட்டு பாஜக சார்பில் ஊத்துமலையில் 308 திருவிளக்கு பூஜை:-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை ஸ்ரீ உச்சிமாகாளிஅம்மன் திருக்கோவில் அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் டாக்டர் அன்புராஜ் தலைமை தாங்கினார்,
ஒன்றிய மகளீரணி தலைவி,ராஜகுமாரி,ஒன்றிய இளைஞரணி தலைவர் மாரிச்செல்வம்,ஒன்றிய செயலாளர் கோகிலா,அரசு தொடர்பு பிரிவு செல்லசாமி முன்னிலை வகித்தனர்
ஸ்டார்டப் பிரிவு மாநில தலைவரும்,
தென்காசி பாராளுமன்ற தொகுதி அமைப்பாளருமான ஆனந்தன் சிறப்புரையாற்றி விளக்கேற்றி துவக்கிவைத்தார்,
செல்வி செல்வகிருஷ்ன மாநிஷா,கலை கலாச்சார பிரிவ மாவட்ட செயலாளர் செல்வகாமாட்சி அறிவுசார் பிரிவு வேல்ராஜ்,ஒன்றிய சிறுபாண்மை அணி தலைவர் மனுவேல்ஞானராஜ்,மற்றும் பென்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் ஒன்றிய துணை தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.