கீழப்பாவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கீழப்பாவூர் வட்டார விவசாயிகளுக்கு ஆலோசனை
தென்காசி மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் பத்மாவதி அறிவுறுத்தலின்படி
கீழப்பாவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்
கீழப்பாவூர் வட்டார விவசாயிகளுக்கு
ஆலோசனை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அவரது செய்தி குறிப்பில்;-
பிசாணப்பருவத்தில் நெற்பயிர் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்தில் இலைசுருட்டுப்புழு ஆங்காங்கே தென்படுகிறது இப்புழு தாக்குதலின் அறிகுறிகளாக இப்புழுக்கள் இலையை நீளவாக்கில் சுருட்டி கொண்டு உள்ளே இருந்து சுரண்டி சாப்பிடும் இப்புழுவின் கழிவு இலையின் மேற்புறம் காணப்படும் இலைகள் வெள்ளை நிறத்தில் காணப்படும்
இப்புழுவை கட்டுப்படுத்த
கைலானிஸ் முட்டை ஒட்டுண்ணி ஏக்கருக்கு 2CC மற்றும் அசாடிராக்டின் 0.03% 400 மிலி ஏக்கருக்கு
- குளோரிபைரிபாஸ் (20EC ) 500 மிலி ஏக்கருக்கு
(அல்லது )
தயோமிதாக்ஷம் (25% WG) 40கிராம் ஏக்கருக்கு ( அல்லது )
புளுபென்டிஅமைடு (20%) 100 கிராம் ஏக்கருக்கு தெளிக்க வேண்டுமென அவரது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளர்.