சென்னை, திருவொற்றியூர், பெரியார் நகரில், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று மதியம் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் பஞ்சநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவொற்றியூர், தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி சங்கர் பங்கேற்று, 149 மாணவர்கள் ; 167 மாணவியர் என, 316 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
அதே போல், ராமகிருஷ்ணா பள்ளியில், 21 மாணவர்கள், ஒன்பது மாணவியர் என, 30 மாணவ – மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள்களை, எம்.எல்.ஏ., வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், 5 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சொக்கலிங்கம், பள்ளி ஆசிரியர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.