மன்னார்குடி செந்தூர ஆஞ்சநேயர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருமஞ்சன வீதியில் உள்ள செந்தூர ஆஞ்சநேயர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது கோவிலின் வளாகத்தில் மகாலட்சுமியின் திருவுருவப்படத்தை அலங்கரித்து வைத்திருந்தனர் அதற்கு முன்னர் கலசத்தில் சுவாமியை எழுந்தருளி செய்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். சுமங்கலி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை பக்தி பரவசத்துடன் விமர்சையாக நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சுமங்கலி பெண்கள் திருவிளக்கிற்கு வஸ்ரங்கள், புஷ்பங்கள் அனுவித்து திருவிளக்கினை அம்பிகை தத்ரூபமாக மனதில் நிறுத்தி திருவிளக்கின் முன் பக்தியுடன் அமர்ந்து 1008 மந்திரங்களைக்கொண்ட லலிதா சகஸ்ரநாம மந்திரங்களை பாஸ்கர சேது சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க பூஜை நடத்தி வைத்தார் .

பூஜையின்போது பெண்கள் தாலிபாக்கியம் நிலைத்திடவும், குடும்பத்தில் மங்களம் பெருகி செல்வம் செழித்தோங்க வேண்டியும், உலக நன்மை வேண்டியும் திருவிளக்கினை வணங்கி தூப தீபங்கள் காண்பித்து மனமுருக பிராத்தனை மேற்கொண்டனர்.. அதனைத் தொடர்ந்து திருவிளக்கிற்கு கற்பூர தீப ஆராதனை கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *