நெல்லை பல்கலைக் கழகத்தின் சார்பாக தேசிய அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட சாகச முகாம்;-

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சந்திரசேகர் பதிவாளர் முனைவர் சாக்ரடீஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி இமாச்சல் பிரதேசத்திலுள்ள தர்மசாலா, மெக்லியோட்கஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்ற சாகச முகாம் இம் மாதம் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சென்று வந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் மாணவ,மாணவிகளை வரவேற்கும் வண்ணமாக தமிழ்நாடு சார்பாக சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் ஜெய டேவிசன் இம்மானுவேல் தலைமையில் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு ,கர்நாடகா கேரளா,தெலுங்கானா, ஆகிய மாநிலங்களில் மொத்தம் 50 மாணவ, மாணவிகள் பங்கேற்ற இம் முகாமில் தமிழக மாணவ மாணவிகள் செல்வம்,கண்ணன் , நம்பிதேவன் ,இசக்கி பாண்டி,சுபிக்ஷா ,

தர்ஷினி,தர்ஷா விபுஷிகா முத்துலட்சுமி ஆகிய நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் பத்து நாட்கள் நடைபெற்ற முகாமில் 70 கிலோ மீட்டர் மலையேறுதல் பயிற்சி, மலையில் 2875 மீட்டர் உயரம் ஏறுதல், இயற்கை மலையேற்றம், ஆற்றினை கடத்தல், செயற்கை மலை ஏறுதல், கயிறு ஏறுதல் ,தற்காப்பு கயிறு கட்டுதல் ஆகியோர் சிறப்பான முறையில் பங்கேற்று பயிற்சி பெற்றனர்

இவர்கள் பாராட்டு சான்றிதழ் பெற்று தமிழகத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்த்தனர்இந்த முகாமிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெளியப்பன் செய்திருந்தார்கள் பல்கலைக்கழக தேர்வாணையர் மற்றும் பேராசிரியர்கள் சி.எஸ்.ஜ ஜெயராஜ் அன்ன பாக்கியம் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஜேசு ஜெகன், முதல்வர் முனைவர் வில்சன் அனைவரும் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *