ஆலங்குளம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் அங்குள்ள காமராஜர் சிலை அருகில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு தற்காலிக கொடி கம்பம் நட்டினர்.

அதில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றுவதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் பேரூராட்சி வாகனத்தில் கொடிக்கம்பத்தை அகற்றி அப்புறப்படுத்தினார்கள் இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் எம்பி ராமசுப்பு தலைமையில் நெல்லை தென்காசி மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது,எஸ்ஐ க்கள் சின்னத்துரை,மகேந்திரன் மற்றும் போலீசார் மறியல் செய்தவர்களிடம் சமரசம் செய்தனர்.
அவர்களின் கொடிக்கம்பத்தை திருப்பி கொடுத்ததால் சமாதானம் அடைந்த காங்கிரஸ் கட்சியினர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலையிட்டு அதன் அருகில் கொடி கம்பத்தை அமைத்து தேசியக் கொடியை ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ்,மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் ஆலடிசங்கரய்யா,ஒன்றிய கவுன்சிலர் முரளி ராஜா, ஓபிசி அணி மாநில துணை தலைவர் ஞான பிரகாஷ்,முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் அருணாசலம், லெனின்,லிவிங்ஸ்டன், ஏசுராஜன், ஊத்துமலை பரமசிவன்,மற்றும் பல்வேறு காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *