பெரியகுளம் நகராட்சியில் மாதாந்திர கூட்டத்தில் திமுக நகர் மன்ற துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி திமுக உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் சத்தமிட்டதால் கூட்டத்தில் பரபரப்பு : கூட்டம் சிறிது நேரம் ஒத்தி வைப்பு:

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது . நகராட்சி நகர் மன்ற தலைவர் திமுகவைச் சேர்ந்த சுமிதா சிவக்குமார் தலைமை தாங்கினார் . திமுக-வை சேர்ந்த துணைத் தலைவர் ராஜாமுகமது ,நகராட்சி ஆணையாளர் மீனா. பொறியாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .இதில் பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .கூட்டம் தொடங்கியவுடன் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் உடன் பிறந்த தம்பி -யும் ,பெரியகுளம் நகராட்சி 24 வது நகர மன்ற உறுப்பினருமான ஓ.சண்முகசுந்தரம் அவர்கள் எழுந்து தேமுதிக நிறுவன தலைவரும் , நடிகருமான விஜயகாந்த் மறைவு , நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினரும் ,இசைஞானி இளையராஜா அவர்களின் மகளும். பின்னணி பாடகியுமான பவதாரணி மறைவு,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும் ,பெரியகுளம் நகராட்சி 29 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் முத்துலெட்சுமி -யின் தந்தையுமான வி.கே.மகாதேவன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்தினர் .

அதன் பின்பு திமுக 7வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் முகமது அலி தனது வார்டு பகுதிக்கு இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்று நகர்மன்ற தலைவரை குற்றம் சாட்டினார். மேலும் 7வதுவார்டு பகுதியில் ஏதேனும் செய்துள்ளீர்கள் என்றால் அதனை கூறுமாறு நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் ஆகியோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்பு நகராட்சி துணைத் தலைவரான திமுகவைச் சேர்ந்த ராஜா முகமது அவர்கள் எழுந்து நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளரை பார்த்து கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற நம் நாட்டின் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்விற்கு தன்னை யாரும் அழைக்காததன் காரணம் என்ன என்று கேள்வி கேட்டார்.

அப்போது கூட்டத்தில் அமர்ந்து கொண்டிருந்த திமுக ,கம்யூனிஸ்ட் , பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர்கள் துணைத் தலைவராக பதவி வகித்து வரும் ராஜா முகமது இதுவரை என்ன பணி செய்துள்ளார் என்ற கேள்வி எழுப்பி அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதில் சிலர் நகராட்சி துணைத் தலைவராக பதவி வைத்து வரும் ராஜா முகமது மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி விடக் கூறி கோரிக்கை வைத்தனர்.ஆளும் கட்சியை சேர்ந்த நகர மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வரும் ராஜாமுகமது – வின் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகி இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது .

இந்நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர்களே
நகராட்சி துணைத் தலைவராக பதவி வகித்து வரும் திமுகவைச் சேர்ந்த ராஜா முகமது மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதரவளித்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது .இதனால் கூட்டம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்து நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் கூட்டத்தை ஒத்தி வைத்தார் .

அதன் பின்பு கூட்டம் தொடங்கி நடைபெற்ற வேளையில் பல்வேறு வார்டு பகுதிகளைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் நகர் மன்ற தலைவரிடம் இதுவரையிலும் தங்கள் பகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்மன்ற தலைவரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

கூட்டத்தில் 14 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சுதா நாகலிங்கம் எழுந்து பேசுகையில் 14 வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென உள்ளே வந்து நகர்மன்ற தலைவரிடம் இதுவரையிலும் தங்கள் பகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனக் கூறி நகர் மன்ற உறுப்பினரை கண்டித்து நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவரிடம் குற்றச்சாட்டை முன்வைத்து கோரிக்கை மனு அளித்தனர் .கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் சபை மாண்பை மீறி பொதுமக்கள் நகர்மன்ற கூட்டத்திற்குள் வருகை புரிந்து மனு அளித்தது கண்டிக்கத்தக்கது என ஒரு சில நகர் மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். முன்னர்அதனால் அங்கு கோரிக்கை மனு வழங்க வந்திருந்த பொதுமக்களுக்கும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது .

கூட்டம் தொடங்கியது முதல் கடைசி வரை பல்வேறு சலசலப்புகளுடன் கூட்டம் நடைபெற்று வந்தது . இந்த கூட்டத்தில் மொத்தம் 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . காலை சுமார் 11 மணி அளவில் தொடங்கிய மாதாந்திர கூட்டம் மதியம் சுமார் 2.30 மணி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *