தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேமுதிக நிறுவனர் நடிகர் விஜயகாந்தின் முப்பதாவது நினைவு நாள் அனுசரிப்பு அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு

தமிழகத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான தேசிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் நடிகர் விஜயகாந்த் அண்மையில் உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் காலமானார் இதனை தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகமெங்கும் 30-வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அரண்மனை தெருவில் நகர தேமுதிக சார்பில் அமைக்கப்பட்ட மேடையில் நடிகர் விஜயகாந்தின் திருவுருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அவருக்கு அனைத்து கட்சிகள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சி தேமுதிக நகர தலைவர் யுவராஜா தலைமையில் நடைபெற்றது. நகர துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் தன்ராஜ் நகரத் துணைச் செயலாளர் ராஜ்குமார் பேரூர் செயலாளர் ராஜேஷ் ஆகியோர் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அதிமுக நகர் செயலாளர் பழனியப்பன் துணை செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நகர்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர். பாரதிய ஜனதா சார்பில் மூத்த நிர்வாகி ராமானுஜம் தலைமையில் கட்சியினர் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகரத் தலைவர் நகர நிர்வாகி முத்தையா தலைமையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் ஜோதி முருகன் சார்பில் கட்சி நிர்வாகிகள் மௌன அஞ்சலி செலுத்தி தங்களது வருத்தத்தையும் வேதனையும் கவலையையும் தெரிவித்தனர்.

நகர் நல கமிட்டி நிர்வாகி அன்புக்கரசர் சார்பில் நிர்வாகிகள் விஜயகுமார் வழக்கறிஞர் மணி கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நடிகர் விஜயகாந்தின் புகழஞ்சலி அவரைப்பற்றி விரிவான கருத்துக்களை பல்வேறு கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *