திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருகே உள்ள செட்டி மேட்டில் உள்ள முப்புடாதி அம்மன் கோவிலில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் செல்வ குமார் தலைமையில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் செட்டிமேடு செல்வகுமார் பேசும்போது செட்டிமேட்டில் தெக்ஷணமாற நாடார் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இடம் இருக்கிறது அதில் ஓட்டு கட்டிடம் இருந்தது இந்த கட்டிடம் பல ஆண்டுகளாக இடிந்து கிடக்கிறது

இதனை தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் தெக்ஷணமாற நாடார் சங்கத்தினை தொடர்பு கொண்டு இந்த இடத்தில் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக ஒரு படிப்பகம் தெக்ஷணமாற நாடார் சங்கத்தின் சார்பில் கட்டி தர ஏற்பாடு செய்ய வேண்டும் வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேசினார்கள் உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசிய தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது தெக்ஷணமாற நாடார் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட இடம் என்றால் அதற்கான ஆவணங்களை கொடுங்கள் அதன் மூலம் தலைவர் மற்றும் நிர்வாகிகளை அணுகி செட்டிமேடு மக்கள் கல்வி கற்பதற்கு கல்விக்கூடம் போல ஒரு படிப்பகத்தை உருவாக்குவதற்கான முயற்சியை தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு முயற்சி எடுக்கும் மேலும் மணிமுத்தாறு அணை 1955 ஆவது ஆண்டு கட்ட தொடங்கி 1958 இல் ஜனவரி 3 ஆம் தேதி உள்நாட்டு துறை அமைச்சர் பக்தவச்சலம் தலைமையில் மராமத்து இலாக அமைச்சர் கக்கன் மற்றும் தலைமை பொறியாளர் எம்ப்ரட்ரிக் இவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அணையை திறந்து வைத்து இருக்கிறார்கள் இந்த அணை கட்டுவதற்கு தேவையான பணத்தை அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே டி கோசலராம் அவர்கள் நன்கொடை வசூல் செய்து அரசுக்கு கொடுத்து அதன் மூலம் கட்டிய அணை தான் மணிமுத்தாறு அணை இந்த அணையை சுற்றிலும் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் அழகிய பூங்கா அமைத்து 1958 ஆம் ஆண்டில் ஜனவரி 3 ஆம் தேதி அணை திறந்த அதே நாளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் பக்தவச்சலம் அவர்கள் இந்த பூங்காவை திறந்து வைத்து இருக்கிறார்கள் தற்போது இந்த பூங்கா சிதலமடைந்து முட்செடிகள் அடர்ந்து காடுகளைப் போல காட்சியளிக்கிறது தமிழக அரசு இந்த பூங்காவை புதுப்பித்து மணிமுத்தாறு அணை கட்டுவதற்கு பெரிதும் காரணமாக இருந்த கே டி கோசல் ராம் அவருடைய பெயரை மணிமுத்தாறு பூங்காவிற்கு வைக்க வேண்டும் என்றும் இது சம்பந்தமாக விரைவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்து இந்த கோரிக்கையை தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் முன் வைக்கப்படும்
என்று பேசினார்கள் இந்த நிகழ்ச்சியில் முத்துச்செல்வம் முருகன் அந்தோணி ராஜ் ரத்தினசாமி வள்ளிநாயகம் சேவியர் மற்றும் செட்டிமேடு இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *