அழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி பணி நிறைவு பாராட்டு விழா
அழகர் கோவில்
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கோவிலின் துணை ஆணையாளரும் செயல் அலுவலருமான ராமசாமி பணிபுரிந்து ஓய்வு பெற்றார் இதனை முன்னிட்டு திருக்கோவில் திருக்கல்யாண மண்டபவளாகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது இதற்கு அறநிலையத்துறை இணை ஆணையாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையர் சுரேஷ் கூடலழகர் பெருமாள் கோவில் உதவி ஆணையர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கோவிலின் கண்காணிப்பாளர் பிரதீபா வரவேற்பு உரையாற்றினார்
இவ்விழாவில் அறநிலையத்துறை முன்னாள் துணை ஆணையர் ராமசாமி கண்காணிப்பாளர் அருள் செல்வம் ஆகியோர் உட்பட வல்லாளபட்டி பேரூராட்சி தலைவர் குமரன் வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம் ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி மற்றும் பல்வேறு கோவில் அதிகாரிகள் தல்லாகுளம் கோவிலின் பேஸ்கார் புகழேந்தி சோலைமலை முருகன் கோவில் மேலாளர் தேவராஜ் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் மற்றும் கோவிலின் நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார்