பால மார்த்தாண்ட புரத்தில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது
தென்காசி மாவட்டம் இடைகால் அருகே பால மார்த்தாண்ட புரத்தில் உள்ள ஸ்ரீ சத்ரிய விநாயகர் திருக்கோயில் வளாகத்தில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் ராவ் பகதூர் ரத்தினசாமி நாடார் அவரது திருவுருவ படத்தை ஊர் நிர்வாகிகளிடம் வழங்கி பேசிய அகரக்கட்டு லூர்து நாடார் சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தி கிராமங்கள் தோறும் சென்று இன்றைய இளைய தலைமுறைக்கு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்
நாடார் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் பெரும் பங்கெடுத்து தன் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் நாடார் மகாஜன சங்கத்தை தொடங்கிவரும் ஊர் எங்கும் நாடு எங்கும் நாடார் உறவின் முறைகளை தொடங்க செய்தவரும் நாடார் சமுதாயத்தின் முதல் ஜமீன்தாரருமான ராவ் பகதூர் ரத்தினசாமி நாடார் அவர்களுடைய திரு உருவப்படத்தை உறவின் முறைகள் தோறும் கொடுத்து வருகின்றோம் பெருந்தலைவர் காமராஜரை மட்டுமே தெரிந்து கொண்ட இன்றைய இளைய தலைமுறைக்கு நாடார் சமுதாயத்திற்காக தன்னை இழந்து சொத்துக்களை இழந்து சுகத்தை இழந்து சமுதாய முன்னேற்றமே தன் கடமையாக கொண்டு செயல்பட்ட தலைவர்களை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கிராமங்கள் தோறும் சென்று சமுதாயத்திற்காக உழைத்த நாடார் சமுதாய தலைவர்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு என்றார்
இந்த நிகழ்ச்சியில் ஊர் தலைவர் முப்புடாதி, நாட்டாமை சக்திவேல், மாரிமுத்து,
நாராயண பிரபு, ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்