செய்தியாளர் ச. முருகவேலு கண்டமங்கலம்
கண்டமங்கலம்
கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாலையை கடந்து செல்ல இரும்பாலான மேம்பாலம் அமைத்து தர வலியுறுத்தி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி , இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி , தமிழக வாழ்வுரிமைக் கட்சி , திராவிட பெரியார் கழகம் , இந்திய ஐக்கிய மாதர் சம்மேளனம் ஆகிய கட்சிகளின் சார்பில் கண்டமங்கலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின்வட்டச் செயலாளர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார்.
இந்திய தேசிய காங்கிரஸ் வட்டார தலைவர்கள் ராதா , ஐயப்பன், சி.பி.எம் ஒன்றிய செயலாளர் உலகநாதன் , விசிக ஒன்றிய செயலாளர் தமிழ் குடி , விசிக பொருளாளர் அம்பேத்கர் , இந்தியா ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.ஆர். பாலமுருகன் , தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் , மாவட்டத் தலைவர் திராவிட நாகு , மாவட்ட பொருளாளர் சிலம்பரசன் , திராவிட பெரியார் இயக்க மாவட்ட தலைவர் இளையரசன் , மாநில கொள்கை பரப்பு செயலாளர் பகுத்தறிவு விஜி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார் . கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில்6-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இவர்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையை கடந்து பள்ளிக்கு செல்ல முடியாமல் கண்டமங்கலம் இரயில்வே மேம்பாலம் பகுதிக்கு வந்து 700மீட்டர் வந்து சுற்றிதான் அந்த பகுதிக்கு செல்ல முடியும். அதே போல அரியூர் மேம்பாலத்திலிருந்து 300 மீட்டர் சுற்றி தான் தினமும் இந்த பள்ளிக்கு வரமுடியும். இந்த நிலையில் புதிய தேசிய நெடுஞ்சாலை வேலை நடைபெற்று வருகிறது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து ஆரம்பித்தால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அதிவேகத்தில் செல்லும். இதனால் மாணவர் மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாது. நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு வேலியை கடந்து செல்லும் போது மிகப்பெரிய விபத்து ஏற்படும் என்கிற அச்சம் மாணவர்களிடமும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியிலும் இருந்து வருகிறது.
இந்நிலையில் பள்ளியின் எதிரே இருபுறமும் ரோட்டை கடந்து செல்ல இரும்பால் மேம்பாலம் அமைத்து தர வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக ஒன்றிய துணை செயலாளர் தெய்வநாயகம் நன்றி கூறினார்.