முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ எம்எல்ஏ இறந்தவர்கள் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்;-
கழுகுமலை அருகே உள்ள கே. லட்சுமிபுரம் கிராமத்தில் தொழிலதிபர் குருசாமி நாயக்கர் மனைவி தாயம்மாள் உடல் நல குறைவால் காலமானார்.
அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ எம்எல்ஏ மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து கழுகுமலையில் கடந்த வாரம் உடல் நல குறைவால் காலமான முன்னாள் அதிமுக நிர்வாகியான ஆபிரகாமின் தந்தை செந்தூர்நாடார் இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்தார்.
பின்னர் கழுகுமலை அருகே சங்கரன்கோவில் சாலையில் விபத்தில் பலியான கோவில்பட்டி வெங்கடேஸ்வரா யூனிவர்சிட்டியில் பணியாற்றிய கழுகுமலை நடுதெரு பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி கோமதியின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார்.
அவருடன் கழுகுமலை அதிமுக கயத்தாறு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் நாகராஜ், பாலமுருகன், வைரவசாமி மற்றும் கோபால்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.