பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே கூடலூர் அந்தோணியார் கோவில் பொங்கல் விழா மற்றும் அலங்கார தேர் பவனி
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கூடலூரில் அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது.
இந்த தேவாலயத்தின் பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின் தேவாலயத்தில் முன்பு கிராம பெண்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்

அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைப்பெற்றது,மல்லிகை தோரணங்கள், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் அந்தோணியார் சொருபம் தனித்தனியாக வைக்கப்பட்டு இருந்தன.
தேர்களை மணலூர் காணியிருப்பு பங்குத் தந்தை ஜோசப் அவர்களால் புனிதம் செய்து தேர் பவனியை துவக்கி வைத்தார். வானவேடிக்கை முழங்க சப்பர தேர்கள் அடுத்தடுத்து அணிவகுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.
வழிநெடுக மக்கள் கூடி நின்று அந்தோனியாருக்கு மெழுகுவத்தி ஏந்தி ஜெபம் செய்தனர் .
தேர்பவனியை முன்னிட்டு தேவாலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் கிராம நாட்டாமைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.