உத்துமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் சேமிப்பு திட்டம் என்ற பெயரில் தங்க நகைகள் மோசடி;-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே
உத்துமலையில் தனியார் நிதி நிறுவனம் என்ற பெயரில் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம் மாதம் தோறும் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிலர் ரூபாய் 1 கோடியே 32 லட்சம் மதிப்பில் சுமார் 2295- கிராம் தங்க நகைகள் மோசடி செய்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஊத்தமலை பகுதியை சோந்த சுமார் 40 க்கும் மேற்பட்ட பெண்கள். மோசடி செய்த
நகைகளை மீட்டு தர கோரியும், மேசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய கோரியும் ஜனவரி 31- அன்று புதன்கிழமை மாலை 5 மணி முதல் பிப்பரவரி வியாழக்கிழமை மதியம் 2 மணி வரை ஊத்துமலை அருகே பஸ்நிறுத்தத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் .
இதை தொடர்ந்து ஊத்துமலை பகுதியை சேர்ந்த
பாதிக்கப்பட்ட முருகாத்தாள் என்ற பெண் கொடுத்த புகார் அடிப்படையில் ஊத்துமலை போலிசார் நகை மோசடி தொடர்பாக தனியார் நிதிநிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர், இளவரசன்,காசலாளர் இமானுவேல்வர்ஷா, கலைசெல்வி அந்தோணியம்மாள் முத்து செல்வி, கண்ணன், வெள்ளத்துரை, சுதா, செல்வராஜ் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் இதனை தொடர்ந்து
போராட்டதில் ஈடுபட்ட பாதிக்கபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.