புவனகிரி செய்தியாளர் சக்திவேல்
புவனகிரி
வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் புவனகிரி பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் வெள்ளாற்றில் உப்பு நீர் கலக்காமல் தடுப்பணை கட்ட வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆ.அருண்மொழி தேவன் தலைமையில் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் உத்தரவுக்கிணங்க. அப்போதைய அதிமுக ஆட்சியில் புவனகிரி பகுதியில் 25க்கும் மேற்பட்ட கிராமவிவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளின் நலன் கருதி புவனகிரி வெள்ளாற்றில் ஆதிவராக நல்லூர் கிராமத்தில் கடல் நீர் உள் புறாமல் தடுத்திட தடுப்பணை கட்டுவதற்கு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்திலே ரூபாய் 95. கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அளவீடு பணிகளும் முழுமை அடைந்த நிலையில் தமிழகத்தின் ஆட்சி மாற்றத்தால் திட்டமிட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்
இதனை வலியுறுத்தி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நகர செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் முன்னாள் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி கழக அமைப்புச் செலரும் முன்னாள் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருக மாறன் முன்னாள் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் எம். பி. எஸ். சிவசுப்பிரமணியன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சிவப்பிரகாசம். சீனிவாசன் . அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் முருகமணி. அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன். அதிமுகவின் மகளிர் அணியினர் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.