புவனகிரி அருகே தம்பிக்கு நல்லான் பட்டினம் கிராமத்தில் மூன்று குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் இறந்ததால் பரபரப்பு
இறந்த பெண்ணின் தகப்பனார் கொடுத்த புகாரின் பெரிப் போலீசார் விசாரணை
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தம்பிக்கு நல்லான் பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(35). எலக்ட்ரீசியனாக இவர் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு ரஞ்சிதா(32) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருந்து வருகிறது. ரஞ்சிதா கொண்ட சமுத்திரத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியவர் திடீரென தூக்கில் பிணமாக தொங்கினார்.
தகவலின் பெயரில் புவனகிரி போலீசார் விரைந்து சென்றுதூக்கில் பிணமாக தொங்கிய ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ரஞ்சிதாவின் தந்தை சுந்தரமூர்த்தி தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.