கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு துவக்கி வைத்து, 52 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4 கோடியே 97 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் கல்விக் கடனுக்கான காசோலைகளை வழங்கினார்.
உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மண்டல துணை பொது மேலாளர் (இந்தியன் வங்கி) பிரேந்திர குமார், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் எம்.சரவணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் எஸ்.பிரசன்ன பாலமுருகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.