தென்காசி மாவட்டம்
ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் மற்றும் சிஐடியுசி, ஏஐடியுசி தொழில் சங்கத்தினர், பீடி தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
சிஐடியுசி சங்கம் தலைவர் அயூப் கான் தலைமை தாங்கினார் பீடி சங்க மாவட்ட செயலாளர்
மகா விஷ்ணு, ஏஐடியுசி சங்கதலைவர் பரமசிவன் ,.
தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் மாவட்ட செயலாளர் மணிமேலை,மாவட்ட தலைவர் பொன்மலர்,மாவட்ட பொருளாளர்காளியம்மாள் மாநில செயற்குழு உறுப்பினர் டேவிட் பாக்கிய ராணி. மாவட்ட இணை செயலாளர் சாந்தி பாக்கியம் ,தீண்டாமை முன்னணி நிர்வாகி பாலு, ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் நிரந்தர அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் களுக்கு காலம் முறை ஊதியம் வழங்கவும் 10 ஆண்டு களுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிவு உயர்வு வழங்க வேண்டும்
பணியிலிருந்து ஒய்வு பெறும் போது ஒரு குறிப்பிட்ட தொகை வழங்க வேண்டும்,காலி பணயிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மே. மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் ஏஐடியுசி, மற்றும் சிஐடியு சிகட்சி நிர்வாகிகள்
மற்றும் பீடி தொழிலாளர் சங்க நிர்வாகிகள்
மாவட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட 700 -க்கும் மேற்ப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போட்டத்தில் ஈடுப்பட்ட அனைவரையும் போலிசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்
இதில் பீடி சங்க மாவட்ட பொருளாளர் கற்பக வள்ளி,
ராமசந்திரன்,வேல்முருகன், ஐய்யத்துரை
பரமசிவன், வேலாயுதம் சுந்தராஜ், உள்பட பலர் உடனிருந்தனர்.