தென்காசி மாவட்டம். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம். காடுவெட்டி கிராமத்தில் 2022-23 ஆண்டு
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகள் மையம் புதிய கட்டிடம் திறப்பு விழா ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரி ரமேஷ் தலைமையில் நடைப்பெற்றது.
ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை,கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்சிவன்பாண்டியன்,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயாகி, ஊராட்சி மன்ற தலைவர் முத்துலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர்
வே. ஜெயபாலன்,ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகளாக கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி சிறப்புரை வழங்கினர்கள் நிகழ்வில் தொழில் அதிபர் மணிகண்டன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜேகே ரமேஷ்,வட்டார மேற்பர்வையாளர் பழனியம்மாள்,அங்கன்வாடி பணியாளர் பகவதி,
காவலாகுறிச்சி ரவிசந்திரன்,கிளை செயலாளர்
ஜேக்கப்பாண்டியன், அந்தோணிசாமி,மனோகர் (எ) போஸ்,குணசேகர்,புஸ்பலதா,சொர்ணம்,கோயில்மணி, ஆகாஷ், ரஞ்சித் ராஜம்மாள், செல்வராஜ், நவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மனோஜ் நன்றி கூறினார்.