தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே
கிராமகமிட்டி மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும்
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
பள்ளி செயலர் ஜெகநாதன் தலைமை தாங்கினார்,பள்ளி தலைமை ஆசிரியர்
குகன் வரவேற்புரை வழங்கினார்,பள்ளி ஆசிரியர் அழகன், வாழ்த்துரை வழங்கினார் ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் எம் திவ்யா மணிகண்டன்
சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு
பள்ளியில் பயிலும் 314 -மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி பேசினார்
இதில் தொழில் அதிபர் மணிகண்டன், ஆசிரியர்கள் ஆசிரியைகள்,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் முடிவில் உதவி தலைமை ஆசிரியர்
அமிர்தவள்ளி நன்றியுரை வழங்கினார்கள்.