செய்தியாளர்
ஆர் .தீனதயாளன்
கும்பகோணத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள், மக்கள் விரோத மத்திய அரசை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட 100-பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் விரோத மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், விவசாயிகள் சங்கத்தினர் அங்கன்வாடி ஊழியர்கள் என ஏராளமானோர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராக கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பியவாறு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 மேற்பட்டோரை கும்பகோணம் துணைக் காவல் கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் தலைமையிலான. காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்..