புதுவை எம் ஜி ஆர் பேரவையின் பொதுக்குழு கூட்டம் பேரவை நிறுவனத் தலைவர் முருகு பத்மனாபன் தலைமையில் துணை தலைவர் நாகராஜன் முன்னிலையில் நடந்தது.

மக்கள் திலகம் புகழ் காக்கும் பணியில் அடுத்தடுத்த இளம் தலைமுறையினரையும், மாணவ மாணவிகளையும் ஈடுபடுத்தும் வகையில் பேரவையினர் அனைவரும் அவரவர் பகுதியில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் உள்ள மாணவ – மாணவிகளுக்கு பலவித போட்டிகள் நடத்தி வெற்றியாளர்களுக்கு மக்கள் திலகம் பெயரில் பரிசுகள் வழங்கி பிள்ளைகளை மகிழ்ச்சி படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

வாரம் ஒரு பள்ளிக்கூடம் என்று தொடர்ந்து இப்பணியை செயலாற்றுவோம் என்று பலர் உறுதி அளித்தனர்!

அன்மையில் மறைந்த அண்ணன் சைதையார் அவர்களின் அன்பு மகன் வெற்றி துரைசாமிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி அன்னாரது திருவுருவப்படத்துக்கு அனைவராலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் கேப்டன் ஜெயா சுந்தரம்,சிவப்பிரகாசம், பொன் கைலாசநாதன், . எம் கே.நடராஜன், . எம் . பி.ராஜ்குமார், விஜயரங்கம்,. எம் எஸ்.வடிவேல், நீலகண்டன், ரத்தினச்சாபாபதி, எம். ஜி. ஆர்.இஸ்மாயில், ஜிம். குமார், ஏழுமலை, ரங்கநாதன், துரைராஜன், கணேசன், அரிகிருஷ்ணன், பிரான்ஸ் செல்வம், சீனுவாசன், குணசேகரன் துரைராஜ், கலியபெருமாள், ழக்கோப், அனந்தராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *