தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உட்கோட்ட காவல்துறை மற்றும்  பொதுமக்கள் இணைந்து
நல்லுறவு ஏற்படும் வகையில்
இரண்டு நாள் விளையாட்டு போட்டிகள் நடந்தது.

நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கிய ம் கல்லூரி மைதானத்தில்  கிரிக்கெட் போட்டியும், ஆலடிப்பட்டி மாணவர் பேரவை மைதானத்தில் வாலிபால் போட்டியும் ஆலங்குளம் காவல் நிலையம் கீழ்புறம் உள்ள மைதானத்தில் கபாடி போட்டியும் நடைபெற்றது.

20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியில் மாவட்டம் முழுவதுமிருந்து 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள் அதில் மடத்தூர் அணியினர் முதல் பரிசும், தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலக காவலர்கள் அணியினர் இரண்டாவது பரிசும், ஆலங்குளம் உட்கோட்ட
காவலர்கள் அணியினர் 3 -வது பரிசும் பெற்றனர்.

இதில் வாலிபால் போட்டியில் 80 அணியினர் கலந்து கொண்டு விளையாடினார்கள் அதில் கன்னியாகுமரி அணியினர் முதல் பரிசும், தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலக காவலர்கள் அணியினர் 2-வது பரிசும், ஆலடிப்பட்டி அணியினர் 3 -வது பரிசும், ஆலங்குளம் உட்கோட்ட காவலர்கள் அணியினர் நான்காவது பரிசும் பெற்றனர்.

ஆலங்குளம் காவல் நிலையம் அருகில் நடந்த கபடி போட்டியில் ஆறு மகளிர் அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.

அதில் ரெட்டியார்பட்டி 
ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் முதல் பரிசும், காளத்திமடம் தென்றல் அணியினர் 2-வது பரிசும் பெற்றனர் ஆண்கள் பிரிவில் 22 அணியினர் கலந்து கொண்டு விளையாடினர் இதில் மணிமுத்தாறு 12-வது பட்டாலியன் காவலர்கள் அணியினர் முதல் பரிசும், பூவனூர் உதயம் அணியினர் 2வதுபரிசும், செட்டியூர் பாரதி அணியின் 3-ம் பரிசும்,ஆலங்குளம் உட்கோட்ட காவலர்கள் அணியினர் நான்காம் பரிசு பெற்றனர் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசளிப்பு விழா நடைப்பெற்றது

விழாவுக்கு ஆலங்குளம் டிஎஸ்பி ஜெயபால் பர்ணபாஸ் தலைமை வகித்தார்.

தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கள் தெய்வம், ரமேஷ், தன்ராஜ், கணேஷ், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, முன்னாள் எம்பி ராமசுப்பு, எம்.எஸ்.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் காவலர் முருகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் டிபி. சுரேஷ்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களு பரிசு வழங்கி பாராட்டினார்.

விளையாட்டு மைதானத்தில் மாநில அளவில் சிலம்பத்தில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்ற குருவன் கோட்டை கிராமத்தை சார்ந்த முருகன் குணசுந்தரி. இவர்களது மகன் கிஷோர்குமார் – மகள் பாக்கியவதி, ஆகியோர் சிலம்பம் கலை நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர்

இதனை பாரட்டி எஸ்.பி சுரேஷ் குமார் பரிசுத்தொகை வழங்கினார்.

நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், மருத்துவர்கள், ரமேஷ், புஸ்பலதா,
தொழிலதிபர்கள் ஆர்.கே. காளிதாஸ், கோல்டன் செல்வராஜ், பேரூராட்சி துணைத் தலைவர் ஜான் ரவி, ரோட்டரி சங்க தலைவர் எஸ்.எம்.வி. மயில்ராஜன்,செல்வராணிடெக்ஸ்டைல்ஸ் அதிபர் பிரின்ஸ் தங்கம், முத்துராஜ்,நகரவியாபாரிகள் சங்க செயலாளர் முத்துவேல், பொருளாளர் குழந்தைவேல் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார், பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *