தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மருத்துவ மனைக்கு ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது

விழாவுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை வகித்தார் எம்பி, ஞான திரவியம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன்,மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கூடுதல் இயக்குனர் கமல வாசன்,
யூனியன் சேர்மன் திவ்யா மணிகண் டன், பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா வரவேற்றார் விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்நாட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து பேசினார்:

தமிழ்நாட்டில் மருத்துவ துறையின் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அதிநவீன மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இந்த ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் 2114 சதுரடி பரப்பளவில் இரண்டு தளங்களுடன்
கூடிய கட்டிடத்துக்கு தற்போது அடிக்கல் நாட்டப்
பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தை பொருத்தவரை சாய்வு தளம், மின்தூக்கி வசதிகள்,அறுவை சிகிச்சை அறை,ஸ்கேன் அறை, பிரசவ வார்டு, மருந்தகம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடங்கள் இந்த மருத்துவமனைக்கு உறுதுணையாக இருக்கும்.
எனவே இந்த கட்டிடப் பணியினை துவக்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன் என பேசினார்.

விழாவில் ஆலங்குளம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவராம் கெள தம், செயற்பொறியாளர் அனிட்டா சாந்தி, உதவி செயற்பொறியாளர்கள் முகமது இப்ராகிம்,
ஜான், உதவி பொறியாளர்கள் செல்வசுபா, ராணி, உதய குமார்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன், முன்னாள் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை அமைப்பாளர் ஆலடி எழில்வாணன்,ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, பொறுப்பு குழு உறுப்பினர் சமுத்திரபாண்டியன்,
மாவட்ட பிரதிநிதி வாசு, நாரணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மணி மாறன், ஒன்றிய கவுன்சிலர் சங்கிதா சுதாகர் அரசு ஒப்பந்ததாரர் வெள்ளத்துரை,
மாணவரணி துணை அமைப்பாளர் எஸ் என் எம் சுரேஷ், வழகறிஞர் யோகேஸ் மற்றும் அரசு அலுவலர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *