காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி அருகே ராயன்பாளையம் கிராமத்தில் இந்திய ஒன்றிய அரசின் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் இந்திய ஒன்றிய அரசின் பல்வேறு கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதில் ஒன்று விஞ்யான் ஜோதி திட்டம்.

அந்த திட்டம் மாணவிகள் அறிவியல், தொழிற்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய கல்விகளில் தேர்ச்சி பெற்று முழுமை அடைந்து மேல்படிப்பு முடித்து சுயசார்புடன் சுதந்திரமாக வாழ ஊக்கமளித்து தைரியப்படுத்த உதவும் திட்டம். மாணவிகளின் பங்கேற்பு குறைவாக இருக்கும் துறைகளில் பாலின விகிதத்தை சமப்படுத்த ஊக்குவிக்கும் திட்டம் விஞ்யான் ஜோதி.

அதை செயல்படுத்த பெண் அறிஞர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்களை ஈடுபடுத்தி மாணவிகளுக்கு போதனை கற்பித்தல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்படுகிறது.

அந்த வரிசையில் 25.03.2024 அன்று காலை 11:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை அப்பள்ளியின் முதல்வர் திரு. நந்தகுமார். ஆர்.ஜி அவர்களின் தலைமையில், முதுகலைப் பள்ளி ஆசிரியை திருமதி லோயிஸ் வர்கீஸ் ஒருங்கிணைப்பில் சுய உந்துதல் குறித்து பயிற்சி பட்டறை நடைபெற்றது.

அதில் திருமதி நந்தினி ஆனந்த்குமார் சிறப்பு பயிற்றுனராக பங்கேற்றார்.

அவர் மாணவ மாணவிகளுக்கு இடுபணி வேலைகளை கொடுத்து, அவர்கள் தாமாகவே செய்து சுயமாக தற்சார்பு உணர்வுகளை அனுபவரீதியாக பெற ஏதுவாக பயிற்சியளித்தார். எண்ணம் ஆராய்தல், உலமான உணர்வியல், ஜீவகாந்தம், நேர்மறை சுயக்கட்டளைகள், மனம், உணர்வு, உடல் நல்லிக்கணம் மற்றும் ஆரோக்கியம், மகிழ்ச்சியின் முக்கியத்துவம், மன அழுத்த மேலாண்மை, யோகா, குளிர்வித்தல், பசித்து புசி ஆகிய படிப்பு துறை வகைகளை செயல்முறை விளக்க வாயிலாக உணர்த்தி அந்த திறன்களை பயன்படுத்தி அறிவியல், தொழிற்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய கல்விகளில் மாணவ மாணவியரின் நாட்டம் மற்றும் ஆர்வம் சிறக்க உதவினார் திருமதி நந்தினி ஆனந்த்குமார்.

பதினோராம் வகுப்பு பயிலும் 28 மாணவ மாணவியர் பயிற்சிப்பட்டறையில் பங்கேற்றனர். அனைத்து மாணவ மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மாணவி அனிஷா மெர்லின் அனைவரையும் வரவேற்றார். மாணவி அபிநயா நன்றி உரைத்தார். மாணவர் மதிக்கண்ணன் நிகழ்ச்சியை ஆவணம் ஆக்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *