பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் நடைபெற்ற தமிழக முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சரின் 76-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா..

பா.ம.க.வை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்களின் 76- ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி பாபநாசம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி மற்றும் இலக்கிய அணி சார்பில் நடைபெற்றது.

அலங்கரித்து வைக்கப்பட்ட வேளாண்மை துறை அமைச்சரின் திரு உருவப்படத்திற்கு தொண்டர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து தாவரங்குடி ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்னாசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். புதிதாக அதிமுகவில் இருந்தவருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *