கோவை சாய்பாபாகாலனி பகுதிக்கு உட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி,பாலசுப்ரமணியம் வீதியில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கான தி.மு.க. புதிய தேர்தல் பணிமணை திறப்பு விழா நடைபெற்றது.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து,45 வது வார்டு சாய்பாபா காலனி பகுதி கழகம் சார்பாக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.முன்னதாக ஸ்டேட் பாங்க் காலனி,பாலசுப்ரமணியம் வீதியில் புதிய தேர்தல் பணிமணை திறப்பு விழா நடைபெற்றது.
சாய்பாபாகாலனி பகுதி கழக செயலாளர் கே.எம்.ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில் 45 வது மாமன்ற உறுப்பினர் பேபி சுதா ரவி,பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி மற்றும் வட்ட செயலாளர் கண்ணன்,மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி சங்கனூர் கோபால்,ம.தி.மு.க.முருகன்,கம்யூனிஸ்ட் ராஜா பகதூர்,சுப்ரமணி,ஒருங்கிணைப்பாளர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பேசிய பகுதி கழக செயலாளர் ரவி,கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் சாய்பாபா காலனி பகுதி யில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சுட்டி காட்டிய அவர்,அதே போல இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் நமது பகுதி அதிக வாக்குகள் பெற வேண்டும் என கேட்டி கொண்டார்..மேலும் நமது வேட்பாளர் இந்த பகுதியில் வாக கு சேகரக்க வரும்போது பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார்..