நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளருக்கு கோரிக்கை…

நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப்பொறியாளர்கள் மற்றும் உதவிப்பொறியாளர் / இளநிலைப்பொறியாளர் – பொது பணியிட மாறுதல் வழங்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறையில் (1) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு (2) நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் (3) திட்டங்கள் (4) பெருநகரம் (5) தேசிய நெடுஞ்சாலை (6) தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டம் -2. (7) தர உறுதி மற்றும் ஆராய்ச்சி (8) திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு (9) சென்னை கன்னியாகுமரி தொழில் தட திட்டம் ஆகிய அலகுகள் செயல்பட்டு வருகிறது.

இதில் பணியாற்றி வரக்கூடிய உதவிக்கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவிப்பொறியாளர் / இளநிலைப் பொறியாளர்கள், பொதுபணியிட மாறுதல் பல வருடங்களாக இல்லாமல் பல்வேறு சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

விருப்ப மாறுதல் என்ற பெயரில் பணியாற்றி வரும் அதே அலகுகளுக்கு சில பொறியாளர்கள் அவரவர்கள் செல்வாக்கை பயன் படுத்தி பணிமாறுதல் பெற்று வருகின்றனர். ஒரே இடத்தில் ஆறு வருடங்களுக்கு மேல் பணியாற்றி வரக்கூடிய நிலை நெடுஞ்சாலைத்துறையில் இயல்பாக மாறி வருகிறது. இதனால் சில பொறியாளர்கள் L D 651 உளைச்சலோடு பணியாற்றி வருகின்றனர், என்பதை வருத்தத்துடன் மதிப்பிற்குரிய அரசு கூடுதல் தலைமைச்செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் எனவே 2024 வது வருடமாவது நெடுஞ்சாலைத்துறையில் 3 வருடம் பணி நிறைவு பெற்று பணியாற்றி வரக் கூடிய உதவிக்கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர் / இளநிலைப் பொறியாளர் ஆகியோர்களுக்கு பொது பணியிட மாறுதல் வழங்கிட உறுதியான நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாநில பொது செயலாளர் மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *