நெட்டப்பாக்கம்

 புதுவை பாராளுமன்ற வேட்பாளர்  வைத்தியலிங்கம் கடும் வெயிலையும் பொறுப்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக வழக்கம்போல் வடுகுப்பம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னர் அங்கிருந்து பிரச்சாரவேனில் புறப்பட்டு கல்மண்டபம், நத்தமேடு, ஏரிப்பாக்கம், சூரமங்கலம், மொளப்பாக்கம்,  மடுகரை, கரியமாணிக்கம் வழியாக வந்து நெட்டப்பாக்கம் ஆலமர திடலில் சிறப்புரை ஆற்றினார்.  முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாரா கலை நாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் தேவபொழிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பாராளுமன்ற வேட்பாளர் வைத்திலிங்கம் பேசியதாவது….

அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்க்கும் இந்த மோடி அரசு அகற்றப்பட வேண்டும் என்றால் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் கைச்சின்னம். புதுவையில் மின் துறையை தனியாருக்கு தாரை வார்த்து விட்டனர்.

இதனால் மின் கட்டணம் மிக அதிக அளவில் உயர்த்துவதோடு விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் கிடைக்காது. புதுவை முதல்வர் ரங்கசாமி குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஒரே ஒரு மாதம் வழங்கினார்கள் பிறகு வழங்கவே இல்லை. இதனால் பெண்கள் மிகவும் கொதிப்படைந்து உள்ளனர். மேலும் புதுவையில் அனைத்து ரேஷன் கடைகளும் அகற்றப்பட்டு விட்டன இதனால் மாத மாதம் பெண்களுக்கு வழங்க வேண்டிய அரிசி தடைபட்டுவிட்டது ஆகவே புதுவை முழுவதும் மீண்டும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு பெண்களுக்கு குடும்பத்திற்கு வெள்ளை அரிசி வழங்க வேண்டும் என்றால் நீங்கள் நீங்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால் குடும்பப் பெண்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஆகவே நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் கை சின்னம். வேலையில்லாமல் இருக்கும் படித்த இளைஞர்கள் மற்றும் தனியார் கம்பனிகளில் குறைந்த மாத ஊதியத்தில் வேலை செய்யும் இளைஞர்கள் ஆகியோர்களுக்கு ஆண்டுக்கு  ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.  இந்தியா முழுவதும் 30 லட்சம் பணியிடங்கள் வேலை வாய்ப்பை உருவாக்கி இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

ஆகவே நீங்கள் கைச்சின்னத்திற்கு வாக்களித்து மத்தியில் தலைவர் ராகுல் காந்தியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவர் பிரகாசம் ரெட்டியார், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மைநாதன், அந்தந்த ஊர் பிரமுகர்கள், காங்கிரஸ் கட்சி அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள், சேவாதள பெண்கள் உட்பட திரளாக பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *