வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடக்கும் மணவாள சுவாமி அம்பாள் அபிஷேக ஆராதனை நிகழ்வு .

அருள்மிகு வேதாரண்யேஸ்வரர்
திருக்கோவிலில் சித்திரை மாதம் வளர்பிறை சஷ்டி திதி நாளை 14/ 4/ 2024 அன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 11 மணியளவில் மணவாள ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனை வெகு விமர்ஸ்த்தியாக நடைபெற உள்ளது.

வரலாறு :

சிவன் பார்வதிக்கு கைலாயத்தில் திருமணம் நடக்கும்போது மொத்த ஜீவராசிகள் ரிஷிகள் தேவர்கள் முனிவர்கள் அனைத்து ஜீவராசிகளும் வடதிசை நோக்கி கைலாயம் சென்றதால் வடதிசை தாழ்ந்தும் தென் திசை உயர்ந்தும் பூமி சமநிலையற்று நிலை குலைந்தது..

இதனால் பார்வதி தேவி சுவாமியிடம்… சுவாமி நம் திருமணம் விபத்து என்றும் ஏன் இதன் போல் அசம்பாவிதம் ஏற்படுகின்றன… என்று கேட்கும் பொழுது.. சுவாமி ஒரு நபரால் இதை சரி செய்ய முடியும் என கூறினார் ..
யார் சுவாமி அவர் என பார்வதி தேவி கேட்க …

அகஸ்தியரே நீங்கள் தெற்கு திசை நோக்கி செல்லும் என சுவாமி கட்டளையிட்டார்…
அகஸ்தியர் சரி என்று செல்வதற்கு முன் சுவாமியிடம் ..
உங்கள் திருமண கோலத்தை பார்க்க எனக்கு அந்த பாக்கியம் பிராப்தம் கிடையாதா என்று அகஸ்தியர் கேட்க..

நீங்கள் எந்த இடத்தில் என்னை மானசீகமாக நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் நான் மணக்கோலத்தில் காட்சி தருகிறேன் என்று ஈசன் உரைக்க..சரி என்று தெற்கு நோக்கி செல்கிறார் அகஸ்தியர்.. அகஸ்தியர் தெற்கு நோக்கி செல்ல இரண்டு இடங்களில் இளைப்பாரி ..தவமிருந்து இருக்கிறார். அந்த இடத்தில் சுவாமி அம்பாள் நின்ற கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்கள்..

கடைசியாக அகஸ்தியர் சத்தியகிரி மலையின் அடிவாரத்திற்கு வந்தபோது பூமி சமநிலை பெற்றது .
அப்போது சுவாமி அம்பாள் சத்தியகிரி மலையின் உச்சியில் மணமேடையில் திருமணக்கோலத்தில் தோன்றி அகஸ்திய மாமுனிவரிடம் உங்களுக்கு என்ன… வரம் வேண்டும் ..

என்றுகேட்க ..எனக்கு கிடைத்த இத்திருக்காட்சி இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் காணப்பெற வேண்டும் ..ஆகையால் இவ்விடத்தில் நீங்கள் மணக்கோலத்தில் வீற்றிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால்.. ஆலயம் அமையபெற்று வருடத்திற்கு ஒரு முறை அகஸ்தியர் பெருமானுக்கு திருமண கோலத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது .. இதை காணும் பக்தர்களுக்கு திருமண தடை நீங்குவதோடு ..திருமணமானவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பிக்கும் எனவும்..

இந்த வருடம் சித்திரை மாதம் வளர்பிறை சப்தமி அன்று இரண்டாம் தேதி 15 /4/ 2024 அன்று காலை 11 மணியளவில் திருமண காட்சி கோலம் நடைபெற உள்ளது எனவும்பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமியின் அருளை பெற வேண்டுகிறோம்.. எனவும் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஆதினம் செவந்திநாத பண்டார சன்னிதி மற்றும் பள்ளியறை பூஜை சிவனடியார் விக்னேஷ் அவர்கள்
தெரிவித்தார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *