செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் இன்று 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி முதல் தலைமுறை வாக்காள மாணவிகளுக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமி, துணை வட்டாட்சியர் மாரிமுத்து, கல்லூரி செயலாளர் மு. ரமணன், கல்லூரி முதல்வர் ருக்மணி, முதன்மை வருவாய் ஆய்வாளர் சோமசுந்தரம், வருவாய்த் துறை ஆய்வாளர் ரஞ்சித், ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன், பூங்குயில் சிவக்குமார், கல்லூரி பேராசிரியர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் மாணவிகள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.