குருபெயர்ச்சி பலன்கள் 2024-2025 ரிஷபம்
ஜோதிடர் அஸ்ட்ரோ மகாமணி .
2024 மே 1 ஆம் தேதி மதியம் 12:10 க்கு (திருகணிதமுறை) மேஷத்திலிருந்து ரிஷபத்திற்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார்.. இந்த வருட குரு பெயர்ச்சி பலன்களை ஒவ்வொரு ராசி வாரியாக பார்ப்போம்..
குறிப்பு: இது ராசிக்கான பொது பலனே..ஒருவருடைய ஊழ்வினை மற்றும் நல்வினை கர்மா என்ன செய்யும் என்பதை ஒருவருடைய ஜெனனகால ஜாதகமே தீர்மானிக்கும்..கோட்சாரம் மற்றும் தசா புத்தி வழி நடத்தும் என்பதை சொல்லிக்கொள்கிறேன்..
தனிபட்ட ஜாதக ஆய்விற்கு..
அஸ்ட்ரோ மகாமணி
WhatsApp:8973061061 என்ற
எண்ணிற்கு தகவல் அனுப்பவும்..
ரிஷப ராசி நண்பர்களே!
ராசிக்குள் குரு வரும் போது வாழ்க்கையில் ஒரு வெறுப்பு வந்துவிடும். வீன் கவலை மனதில் வாட்டி எடுக்கும். பல வழிகளில் பணம் விரையம் ஏற்படும் ..அது சுப விரயமாக இருக்கும் கவலை வேண்டாம்..மனைவி வழியில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம் செய்கின்ற தொழிலில் மாற்றம் ஏற்படும். மனைவி குழந்தைகள் ஆதரவு இருக்கும். அளவுக்கு அதிகமாக வேலை செய்ய நேரிடும் .
இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி உங்கள்ஜென்மராசியிலேயே சஞ்சரிக்கப் போகிறார்.
விரய குருவை விட ஜென்ம குரு மோசமானவர் என்பது பொதுவான கருத்து ஆனால்,சில முக்கியமான விஷயங்களில் நன்மைகள் நிறைய கிடைக்கும். இதனால் உங்களுக்கு நல்ல காலம்தான்.
நல்ல எண்ணத்தோடும், பிறருக்கு தீங்கு நினைக்காமலும் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்தும், தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்களுக்கு கிரகங்களால் எந்த தீமையும் வராது.. அதே நேரத்தில் எந்த கிரகம் நமக்கு சாதகமான நிலையில் இல்லையோ,அந்த கிரகத்திற்குரிய கிழமையில் விரதமிருப்பதும், அந்த கிரகத்திற்குரிய தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதும் சிறப்பான பலனை தரும்.
ஜென்மராசியில் உலாவும்போது புத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானம், தந்தை ஸ்தானம் ஆகியவற்றை குருபகவான்
புனிதப்படுத்துகிறார். இதனால் பெரும் லாபங்களை அடையப் போகிறீர்கள் வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணமுயற்சிகள் இத்தனை காலம் இழுத்தடித்து வந்திருக்கும். இனி அந்த முயற்சிகளுக்கு உடனடி பலன் கிடைக்கும் திருமணம் தொடர்பாக நல்லதொரு விஷயம் நிச்சயம் நடக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தைப் பேரையும் தரப் போகிறார் குரு பகவான், லாட்டரி போன்ற அதிர்ஷ்டத்துக்கும் இடமுள்ளது. குருவின் அருட் பார்வையால் தன லாபம் அடையப் போகிறீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் நிச்சயம்உண்டு.
குரு பார்க்குமிடங்களில் நல்ல பலன்கள் கிடைத்தாலும், இருக்குமிடத்தில் பிரச்சினைகளை உருவாக்கலாம். உடல் நல பாதிப்பும், அலுவலகதத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மையும், அனாவசிய பயமும் குருப்பெயர்ச்சியால் ஏற்படும். மனதில் அனாவசியமாக பயமும்குடிகொள்ளும். கோபமும் அடிக்கடி வரும்.
குழந்தைகளுக்கு நல்ல பல பலன்கள் உண்டாகும். வீட்டில் மங்கள ஓசையும் கேட்கும்.மகள், மகனின் திருமணத்தை திட்டமிட்டபடி நடத்தி முடிக்க வாய்ப்புக்கள்
உண்டாகும். அதிகமான பிரயாணங்கள் செய்ய வேண்டி வரும். சிலர் வெளிநாடுகளுக்குப் போகவும் வாய்ப்பு கிட்டும். வீட்டில் அமைதியும் ஒற்றுமையும் பெருகும். உங்களை விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும்
அவர்களாகவே வந்து சேர்ந்து மகிழ்ச்சியைத் தருவர். அதே நேரம் அலைச்சலும், வேலைச் சுமையும் அதிகரிக்கும் வழக்குகள் சாதகமாக முடிந்து பாரம்பரிய சொத்துக்கள் உங்களைவந்து சேரும்.
உங்கள் ராசிக்கு குருபகவான் வருவதால் நன்மைகள் ஓரளவுதான் கிடைக்கும்.
1-ஆம் இடம் என்பது குருபலத்திற்கு இல்லை.ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் நன்மை-தீமை ஆகிய இரண்டு விதமான பலன்களையும் ஏக காலத்தில் அனுபவிக்கும்படியான சூழ்நிலைகள் ஏற்படும்.எந்தவொரு விஷயத்தையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் கவனத்துடன் இருந்தால், பணிகள் தொய்வின்றி சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கும். பொருளாதார அளவில் யானைக்கும், பானைக்கும் சரி என்பதுபோல, வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருக்கும். உறவுகளை புரிந்துகொண்டால், அவர்களின் ஆதரவும் அனுகூலமும் குறையாமலிருக்கும். உங்களை புகழ்பவர்களை நல்லவர்கள் என்று நம்பி உங்கள் சொந்தப் பிரச்சினைகளை அவர்களிடம் கொட்ட வேண்டாம். கோபதாபங்களை குறைத்துக்கொண்டால், குடும்பத்தில் கூடுதல் மகிழ்ச்சி நிலவும். சீரான உணவுப்பழக்க வழக்கம், தேவையான உடற்பயிற்சி. இந்த இரண்டையும் கடைபிடித்து வர, ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளி வட்டாரங்களிலிருந்து வரும் வம்பு, தும்பு ஆகியவற்றில் ஈடுபடாமலிருங்கள். அமைதியாக வேலைகளைச் செய்ய இயலும் .
பல் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனித்து வந்தால், எந்த பாதிப்பும் இராது.
ஜென்மராசியில் குருபகவான் அமர்வதால் எந்த செயலிலும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் குறைகள் வெளியில் தெரியாமல் நிறைகள் மட்டும் தெரியும் வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உங்களுடைய நல்ல நடத்தை காரணமாக அனைவரும் தங்களை தேடி வருவார்கள். புத்திசாலித்தனமாக நடந்து பிறருக்கு குரு போல் இருந்து அவர்களை வழி நடத்துவீர்கள்.
ஜென்மத்தில் குரு வந்தால் செலவுகளே அதிகரிக்கும்! என்றாலும், சுபச் செலவுகளே உங்களுக்கு உருவாகும்…
ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு 5,7,9 ஆகிய இடங்களை பார்க்க போகிறார். அதன் பார்வை பலத்தால் பக்க பலமாக இருப்பவர்கள் ஒத்துழைப்பு செய்வார்கள்
அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகள் பெரிதும் வெற்றி பெறும், வி.ஐ.பி.க்களின் நட்பால் விரும்பிய காரியங்களை, விரும்பியபடியே செய்து முடிக்கும் வாய்ப்பு உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடி வருவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால், பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகிறது.
எனவே, பொருளாதார நிலை உயரும். புனித காரியங்கள் செய்வீர்கள் பிள்ளைகள் வழியில் நல்ல தகவல்கள் வந்து சேரும் புத்திரர்கள் உங்கள் வழிகாட்டுதலை மனமுவந்து ஏற்று படிப்பு, ஒழுக்கத்தில் முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும் வாரிசுகளுக்கு வெளிநாட்டு வாய்ப்புகளை உபயேகப்படுத்திக் கொடுப்பீர்கள் அந்திய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும் பூர்வசொத்து உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் பூர்வீக சொத்துக்களில் இதுவரை இருந்த இழுபறியான பஞ்சாயத்துக்கள் இனி நல்ல முடிவுக்கு வரலாம். வழக்கில் இருந்த தந்தைவழி சொத்து வந்துசேரும்.
தந்தை வழியில் எதிர்பார்த்த ஒத்துழைப்புகள் கிடைத்து, தக்க விதத்தில் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.
உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக ஐந்தாம் இடத்தையும். ஏழாம் பார்வையாக ஏழாம் இடத்தையும், ஒன்பதாம் பார்வையாக ஒன்பதாம் இடத்தையும், பார்வையிடுவதால் தெய்வபுலம் தெய்விக ஈடுபாடு ஏற்படும். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்
மறைந்து ஒற்றுமை ஏற்படும். ஒரு சிலருக்கு சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகளில் சுமூகமான தீர்வு காணப்படும். வெளிநாட்டு பயணங்களின் மூலம் முன்னேற்றம்
உண்டாகும்.
குடும்ப சிரமங்களை ஒழுங்குபடுத்துவர். மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வளரும். நண்பர்கள் முக்கிய தருணங்களில் இயன்ற உதவி புரிவர்.. பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது.
கஷ்டமான
சூழ்நிலையிலும் குடும்பத்தேவை ஓரளவு நிறைவேறும். குரு பார்த்தாலும், குரு சேர்ந்தாலும் கோடி நன்மை அல்லவா? எனவே, கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிளந்து கொண்டு கொடுக்கும் என்பதைப் போல, தேடி வந்த குரு உங்களை கோடீஸ்வரராகவும் ஆக்கலாம். கொடி கட்டிப் பறக்கும் வாழ்க்கையையும் அமைத்து கொடுக்கலாம்.
ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தையும் குறிக்கிறது என்பதால் உங்கள் மகன் அல்லது மகள் வாழ்வில் நிறைய முன்னேறி உங்களைப் பெருமை கொள்ளச் செய்வார். படிப்பில் உங்கள் குழந்தை செய்யப்போகும் சாதனை பெரிய அளவில் இருக்கும். உங்கள் மகள்! மகள் உத்யோகத்துக்குப் போகிறவராய் இருந்தால் அவருக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். மகள் அல்லது மகள் வாழ்க்கையில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியத்துக்கு ஏங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் நீங்கள் முற்பிறவியிலும் இந்தப் பிறவியிலும் செய்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு உதவ முன்வரும். நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.
ஏழாம் வீடு என்பது கணவன் மனைவிக்கு உரிய இடமாகும். இது வரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும் திருமணம் ஆகி மண வாழ்ககையில் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவையெல்லாம் நல்லபடியாக முடிந்து நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இணக்கமான அன்பும் நிலவும்.. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன் ஒருவரால் ஒருவருக்கு லாபம் மற்றும் நன்மைகள் ஏற்படும் மனைவி வழியிலிருந்து சொத்துக்கள் வரும் இதுவரை கணவர் மனையின் உடல் நிலையில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவை எல்லாம் சரியாகும். உங்கள் கணவருக்கு மனைவிக்கு உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு சம்பளம் உயரும். அவர் வேறு நல்ல வேலைக்கு மாறவும் வாய்ப்பு உண்டு.
குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டைப் பார்க்கிறார் ஒன்பதாம் வீடு என்பது சௌபாக்கிய ஸ்தானம் வாழ்க்கை வசதிகள் பெருகும். நிம்மதியும் மகிழ்ச்சியும் மனதில் நிலவுவதுடன் பணமும் நிறைய புரண்டு மனதிலும் பாவ சிந்தனைகள் இல்லாமல் இருக்கப்போகிறீர்கள்..
வழிபாடு ஸ்தலம்:
கோடியக்கரை அமிர்தகரசுப்பிரமணியர் -வெள்ளிக்கிழமையில்