திருவொற்றியூர்
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் பகுதிக்கு அருகே இருக்கக்கூடிய மின்சார ரயில் டிக்கெட் கவுண்டர் அருகில் வட மாநிலத்தை சேர்ந்த சுஜித் மண்டல் மற்றும் அவருடைய மனைவி சஞ்சனா ஆகியோர் தனது ஒன்றை வயது குழந்தையை வைத்து அமர்ந்துள்ளனர் அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் குழந்தையை அமர்ந்து இருந்த இடத்திலேயே விட்டு விட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக சென்றுள்ளனர்
திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை அங்கு காணவில்லை எனவும் இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக ரயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்
அப்போது ரயில் மூலம் இருவர் குழந்தையை ஏற்றி சென்றது தெரியவந்தது உடனடியாக அதனை பின் தொடர்ந்து போலீசார் சென்ற நிலையில் எண்ணூர் பகுதியில் குழந்தையை விற்பதற்காக விலை பேசிய போது பொதுமக்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் கார்த்திக் மற்றும் செல்வம் ஆகிய இரண்டு பேரையும் எண்ணூர் போலீசார் கைது செய்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர் குழந்தையை பத்திரமாக மீட்ட உதவி ஆய்வாளர் சரளா பெற்றோரிடம் ஒப்படைத்தார் கைது செய்யப்பட்ட இருவரும் ஏற்கனவே இதுபோன்று குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்