அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் சாலை மறியல்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் உள்ள

சோழபுரம் கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரன் ( 50) மாரியம்மாள்(45) தம்பதியர் கூலி வேலைக்கு செல்லும் இவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாரியம்மாள் சாலை ஓரத்தில் உள்ள பைப்பில் தண்ணீர் பிடிப்பதற்கு சாலையை கடக்கும் போது அதி வேகமாக வந்த பைக் மோதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அவரது சடலம் உடற்கூறு ஆய்வுக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து அங்கு வந்த டிஎஸ்பி அழகேசன் இன்ஸ்பெக்டர்கள் தனலட்சுமி (தளவாய் புரம்).

நவாஸ்தீன் (நெடுஞ்சாலை போக்குவரத்து)

சார்பு ஆய்வாளர் பிரியா ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அடிக்கடி இந்த பகுதியில் விபத்து ஏற்படுகிறது இங்கு வேகத்தடை இல்லாததால் அதி விரைவாக வாகனங்கள் செல்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் தற்போது இறந்த மாரியம்மாள் மகள் கூட இங்கு சாலை விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை யில் உள்ளார் கடந்த மாதம் ரோட்டின் ஓரத்தில் உள்ள கடைக்குள் லாரி புகுந்து அங்கிருந்த பெண் அதிர்ஷ்ட வசமாக உயர் தப்பினார் ஆகவே இதற்கு இந்த இடத்தில் வேகத்தடை அமைத்தால் மட்டுமே நாங்கள் இங்கிருந்து செல்வோம் என்று உறுதியாக இருந்தனர்  காலை 8 மணிக்கு ஆரம்பித்த மறியல் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெண்கள் கொழுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அமர்ந்து இருந்ததால் கிராமத்தினர் அவர்களுக்கு குடி தண்ணீர் மற்றும் நிழல் பந்தல் ஆகியவற்றை ஏற்பாடுகள் செய்துவந்தனர் பின்னர் வட்டாட்சியர் ஜெயபாண்டியன் உடன் வருவாய் துறையினர் வந்து அவர்களிடம்.

வேகத்தடை அமைத்து தர ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தனர் இரு துறையினரும் தந்த உத்திரவாதத்தை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக மறியல் நடந்ததால் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் நவாஸ்தீன் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை வேறு வழியில் அனுப்பி வைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *