தெருக்கூத்து கலைஞர்களை வைத்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பு. 30 அடி உயர மாலையை க்ரேன் உதவியுடன் அணிவித்து திமுக வேட்பாளர் சிறுவேடல் க.செல்வத்தை வரவேற்ற திமுக கட்சியினர்.

காஞ்சிபுரம்
மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல்
மாதம் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் , திமுக வேட்பாளர் சிறுவேடல் க. செல்வம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் ஒன்றிய பகுதிகளில் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம், புதுப்பாக்கம் , வேளியூர், கோவிந்தவாடி, படுநெல்லி, புரிசை, வளத்தூர் ,பரந்தூர், சிறுவாக்கம் ,காரை உள்ளிட்ட முப்பதற்கும் மேற்பட்ட பகுதிகளில் வாகன பரப்புரையில் ஈடுபட்டார்.

முன்னதாக படுநெல்லி பகுதியில் க்ரைன் மூலம் சுமார் 30 அடி உயர உள்ள 200 கிலோ எடை கொண்ட மாலையை கிரேன் உதவியுடன் வேட்பாளருக்கு அணிவித்து உற்சாக வரவேற்பை அளித்தனர். தொடர்ந்து வேட்பாளருக்கு தெருக்கூத்து கலைஞர்கள் நடனமாடி , வேட்பாளரை வரவேற்றது மட்டுமில்லாமல் நூதன முறையில் உதயசூரியன் சின்னத்திற்கு தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் வாக்குகளை சேகரித்தனர்.

இப் பிரச்சாரத்தின் போது வாலாஜாபாத் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர் கே தேவேந்திரன் வடக்கு ஒன்றிய செயலாளர் படு நெல்லி பாபு துணை செயலாளர் கவிதாடில்லி பாபு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜலட்சுமி குஜராஜ், லோகுதாஸ், ஜெயபால், பார்த்தசாரதி மற்றும் திமுக வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கண்டு தேர்தல் பரப்புறையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *