இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தங்கச்சிமடம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை.

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த மார்ச் 13ஆம் தேதி அன்று கோடியக்கரை அருகே உள்ள காங்கேசன் துறை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர் அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 14 மீனவர்களையும் கைது செய்தனர்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் தனுஷ்கோடியில் இருந்து 5 நாட்டிகள் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த பொழுது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

பின்பு இந்த 14 மீனவர்களையும் இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்களை தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனர் பின்பு மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசு உடன் பேச்சுவார்த்தைக்கு பின்னர் 21 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக விடுதலை செய்தது இந்த 21 மீனவர்களையும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் இலங்கை அரசு ஒப்படைத்தது

அதன்பின்னர் இலங்கையில் உள்ள முகாமில் 21 மீனவர்களையும் தங்க வைத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்ட பின்பு இந்திய தூதரக அதிகாரிகள் 21 மீனவர்களுக்கும் அவசரக் கால பாஸ்போர்ட்டுகள் வழங்கி இலங்கையில் உள்ள கொழும்புவில் இருந்து ஏர் இந்தியா விமான மூலம் சென்னை விமான நிலையத்திற்கு 21 மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையம் வந்த 21 மீனவர்களின் அவசரகால பாஸ்போர்ட்டுகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பின்பு சுங்க சோதனை உள்ளிட்ட அனைத்து சோதனைகளையும் முடித்த பின்பு சென்னை விமான நிலையத்திற்கு வெளியே அழைத்து வந்தனர் சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று இரண்டு தனி வாகன மூலம் காரைக்கால் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *