கும்பகோணம் அருகே தோட்டத்தில் சுற்றிய முதலை – பிடித்து கொள்ளிடம் ஆற்றில் விட்ட வனத்துறை அதிகாரிகள்.

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், சுமார் 50 க்கும் மேற்பட்ட முதலைகள் இருக்கிறது, கொள்ளிடம் அணைக்கரையில் வசித்து வரும் முதலைகள், ஆண்டு தோறும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது, கொள்ளிடம் ஆற்றின் வழியாக
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சோழபுரம் போன்ற பாசன வாய்க்கால்கள் வழியாக ஆற்றங்கரையோர கிராம நீர்நிலைகளில் தங்கி விடுகின்றன.

இந்த முதலைகள், அந்த பகுதியில் ஆற்றில் இறங்கும் பொது மக்கள், கால்நடைகளை கடித்து இழுத்துச் செல்கின்றன. தொடர்ந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் வெள்ள பாதிப்பு ஏற்படும் போதும், அங்கிருந்து முதலைகள் வெளியேறி மீண்டும் ஊருக்குள்ளும், மெயின் ரோட்டிற்கும்
தோட்டங்கள் மற்றும் வயல்வெளி பகுதிகளுக்கு வந்து விடுகின்றது.

இந்நிலையில்,சோழபுரம் அருகே மகாராஜபுரம் கடமண்குடி பகுதியில் உள்ள கலத்தடி மேட்டுத் தெருவில் உள்ள காசிராஜன் தோட்டத்தில் சுமார் 4 அடி நீளமுள்ள 50 கிலோ எடையுள்ள முதலை நடந்து வந்தது. அப்போது பாதசாரி வழியாக நடந்து செல்லும் பொது மக்கள் முதலை வருதையறிந்து அலறி அடித்து கொண்டு திரும்பி ஒடினர்.

இதனை அறிந்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் வனச்சரக அலுவலர் பொன்னுசாமி
உத்தரவின் பேரில் வனவர் சண்முகம் தலைமையில் வனப்பணியாளர்கள் உடன் சென்று முதலையை கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பத்திரமாக மீட்டு அணைக்கரை கொள்ளிடம் ஆற்றின் பாதுகாப்பாக விட்டனர் பின்னர் முதலை ஆற்றிற்குள் சென்று விட்டது.கிராம மக்கள் முன்எச்சரிகையுடன் பார்த்து விட்டதால், பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *