மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
யிலிருந்து வைகையாற்றில் கழிவு நீர் கலக்கப் படுவதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், பொதுப் பணித் துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வைகை நதிகள் மக்கள் இயக்க நிறுவனர் வைகை ராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:

தேனி மாவட்டம், வைகை ஆற்றிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் தேனி,மதுரை,
சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்ட விவசா யத்துக்கும், குடிநீர்த் தேவைக்கும்
முக்கியப் பங்கு வகிக்கிறது.

மதுரை அரசு மருத்துவ மனையில் தினமும் புறநோயாளிக ளாக 6 ஆயிரம் பேரும், உள் நோயா ளிகளாக 3,500 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு பல்வேறு அறுவைச் சிகிச்சைகள் உள்பட உயர்தர மருத்துவச் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலி ருந்து வெளியேறக் கூடிய ரசாய னம் கலந்த மருத்துவக் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல், ஆழ்வார் புரம் பகுதியில் உள்ள வைகையாற் றில் நேரடியாகக் குழாய் மூலம் கலக்கப்படுகிறது.

இதனால், சுற் றுச்சூழல் மாசடைவதுடன் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய தொற்று நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே, வைகை ஆற்றில் மருத்துவக் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர், இந்த வழக்குத் தொடர் பாக, பொதுப் பணித் துறைச்செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *