புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் நடந்து முடிந்த 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஓட்டுணர்களுக்கு பாராட்டு விழா

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி திரு. பிரபாகர ராவ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமையேற்று கலந்து கொண்டு பேசிய வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அவர்கள் கூறுகையில் தங்களுடைய பணி மிகச் சிறப்பானது
என்றும் குறிப்பிட்ட தேர்தல் தினங்களில் எந்தவித தொய்வும் இல்லாமல் நீங்கள் பணியாற்றியது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளீர்கள் என்றும் மேலும் வருகின்ற தேர்தல்களிலும் மற்றும் பேரிடர் காலங்கள் உள்ளிட்ட அவசரப் பணிகளில் தங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் தாங்கள் இது போன்று சிறப்பாக பணியாற்ற முன்வர வேண்டும் எனவும் பொது மக்களுக்கு ஓட்டுனர்களின் பங்கு மிகவும் அவசியம் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில் வாகன ஆய்வாளர் தக்ஷிணாமூர்த்தி தேர்தல் துறை கண்காணிப்பாளர் வித்யாதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.