புதுவை அரசுக்கு வன்னிய முன்னேற்ற இயக்கம் தலைவர் லிங்கசாமி வேண்டுகோள்
புதுச்சேரி மே 20
புதுச்சேரி வன்னிய முன்னேற்ற இயக்கம் தலைவர் கே. லிங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
புதுச்சேரி மாநிலம் முதலியார் பேட்டை சட்டமன்ற தொகுதி மரப்பாலத்தில் இருந்து முருங்கப்பாக்கம் திரௌபதி அம்மன் கோயில் வரை தொடர்ந்து தினந்தோறும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வெளியூர் வாகனங்கள் மிகவும் சிரமப்படும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது
தினந்தோறும் மக்கள் அவதிப்படுகிறார்கள் மன உளைச்சல் ஆகிறது மக்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சாலையாக உள்ளது புதுவை அரசானது இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்
இந்த சாலை முக்கியமான சாலையாக புதுவையிலே பிரதான சாலை என்பது குறிப்பிடத்தக்கது ஆகவே இந்த சாலையை புதுவை அரசு தனி கவனம் செலுத்தி மக்கள் சிரமம் இல்லாமல் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மக்கள் அவதிப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
சாலைகளில் தேவையில்லாத வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது தேவையில்லாமல் நிறைய பழவண்டி கடைகள் சாலை முழுக்கும் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் தொடர்ந்து அப்பகுதியில் வாரம் ஒரு முறையாவது ஏதாவது ஒரு வேலை செய்து இரண்டு பக்கமும் பள்ளம் எடுக்கப்பட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் பிரதான சாலை என்பதால் காலதாமதம் படுத்தாமல் உடனுக்குடன் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகவும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்
தொடர்ந்து இந்த சாலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள் உடனே புதுவை அரசு மீண்டும் மீண்டும் கவனம் எடுத்து இந்த சாலையை தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.