ஆய்க்குடி பேரூராட்சியில் அடிப்படை கட்டமைப்புகளுக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்-அமைச்சர் கே.என்.நேருவிடம் பேரூராட்சி தலைவர் மனு
தென்காசி, மே – 21
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சியில் அடிப்படை கட்டமைப்பு களுக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர்
க.சுந்தர்ராஜன் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சியில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் க.சுந்தர்ராஜன் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச் சர் கே.என். நேருவை சந் தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: –
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சி அனந்தபுரம் பகுதியில் ரூ. 1 கோடி மதிப் பில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், ரூ.1 கோடி மதிப்பில் அகரக்கட்டு 8 முதல் 10வது வார்டு பகு தியில் வாறுகால் மற்றும் குறுக்குத்தெருக்களில் சிமெண்ட் சாலை அமைத் தல், ரூ.50 லட்சம் மதிப்பில் பெரியார் நகரில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத் தல், ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பில் சிவன் கோவில் ரத வீதிகளில் சிமெண்ட் சாலை அமைத்தல்,
ரூ.2 கோடி மதிப்பில் பொட்டல் நல்ல தண்ணீர் குளக்கரையில் தடுப்புச் சுவர் மற்றும் தார் சாலை அமைத்தல், ரூ.2 கோடி மதிப்பில் முருகன் கோவில் அருகில் கிணறு அமைத்தல், ரூ.50 லட்சம் மதிப்பில் ராம்நகர் பகு தியில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைத் தல், ரூ. 2 கோடி மதிப்பில் மல்லபுரம் குளம் ரோடு தடுப்புச்சுவர் அமைத்தல், ரூ.3 கோடி மதிப்பில் கம் பிளி – விந்தன்கோட்டை இணைப்பு சாலை அமைத் தல், ரூ.1 கோடி மதிப்பில் கம்பிளி பகுதியில் வடி கால்கள் அமைத்தல், ரூ.2 கோடி மதிப்பில் கம்பளி மகாலிங்கம் கோயில் செல்லும் சாலை தடுப் புச் சுவர் மற்றும் தார் சாலை அமைத்தல், ரூ.1 கோடி மதிப்பில் கம்பிளி நாராயண பேரி குளத்தில் ஊரணி மற்றும் தடுப்பு சுவர் அமைத்தல் உள் ளிட்ட பணிகளுக்கு சுமார் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த கோரிக்கை மனிவினைப் பெற்றுக் கொண்ட தமிழக நகர்புற வளர்ச்சித்துறை கே.என்.நேரு விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.