தென்காசி, மே – 21

தென்காசி மாவட்டம்,
செங்கோட்டை நூலகத்தில் வைத்து 65- வது நூல் திறனாய்வு போட்டி மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .

பண்பொழி அரசு பள்ளி ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் எழுதிய “தமிழ் காதலன் கவிதைகள்” என்ற நூல் திறனாய்வு செய்யப்பட்டது. எழுத்தாளர் நல்லை. கணேசன் அவர்கள் எழுதிய “குறளுக்குப் பொருள் தந்த கு. காமராஜர்” என்ற நூலை வெளியிடுவதற்கு முன் அவர் இயற்கை எய்தினார் .அவர் சார்பாக அவரது மனைவி பிரேமா மற்றும் அவரது, மகள்கள் சத்யா ராஜன் ,சித்ரா சண்முகம் ,மகாலட்சுமி செல்வரத்தினம், ஆகியோர் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள் .

இந்த நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆதிமூலம் முன்னிலை வகித்தார் .விழுதுகள் சேகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செங்கோட்டை நல்நூலகர் கோ.இராமசாமி அனைவரையும் வரவேற்றார்
எழுத்தாளர் ராயகிரி சங்கர் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.எழுத்தாளர் இளங்குமரன், ஐயப்பன், சி.முத்தரசு, ராஜேஷ், மைதீன்பிச்சை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த திறனாய்வு போட்டிக்கு நடுவராக செங்கோட்டை எஸ் .ஆர் .எம். பள்ளி தமிழ் ஆசிரியை சுசீலா கலந்து கொண்டார் . எழுத்தாளர் சங்கரசுப்பிரமணியன் ஆசிரியர் சித்ரா ஆகியோர் ஏற்புரை வழங்கினார்கள். இந்த விழாவில் 75க்கும் மேற்பட்ட வாசகர்கள் கலந்து கொண்டார்கள்.முடிவில் செங்கோட்டை நூலக வாசகர் வட்டத்தின் பொருளாளர் தண்டமிழ்தாசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *