பெரியார் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 116.30 கன அடியாகவும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 621 கன அடியாகவும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது 1961 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.வைகை அணையின் நீர்மட்டம் 48.கன அடியாகவும் அணைக்கு வினாடிக்கு.238 கன அடி நீர் வரத்து உள்ளது அணையில் இருந்து வினாடிக்கு 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் நீர் இருப்பு.1742 மில்லியன் கன அடியாக உள்ளது 57 அடி கொண்ட மஞ்சளாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இருந்தும் இதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் இருந்தும் தொடர் மழையால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து 47.30 கன அடியாக உள்ளது அணைக்கு வினாடிக்கு 57 கன அடி நீர்வரத்து உள்ளது அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை. அணையில் நீர் இருப்பு 292.15 மில்லியன் கன அடியாக உள்ளது.126.28 கன அடியாக உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 கன அடியாக அணை நிரம்பி அணைக்கு வரும் நீர்வரத்து 49.63. கன அடி நீரும் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது அணையில் 100 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது
.52.55 கன அடி இருப்பு கொண்ட சண்முகா நதி நீர்மட்டம் 30.60 கன அடியாகவும் அணைக்கு நீர்வரத்து 24.40 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு24.40 மில்லியன் கன அடியாக உள்ளது அணையில் இருந்து நீர் திறப்பு 11 கன அடியாகவும் உள்ளது மேற்கண்ட அணைகளின் நிலவரம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நிலையாகும்