காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பேருந்து நிலையம் அருகே மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா திமுகவினரால் கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது
அதனைத் தொடர்ந்து 1000 ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் 101 பிறந்தநாளை முன்னிட்டு மா, தேக்கு, கொய்யா என 101 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி, படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்