சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் முத்தமிழர் அறிஞர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு நாங்கூர் பகுதிகளில் சீர்காழி கிழக்கு ஒன்றியம் சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இதில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் திருவெண்காடு அரசு மருத்துவமனையில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு உணவு வழங்கினார் அதனைத் தொடர்ந்து நாங்கூர் கடைவீதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் செரிவூட்டப்பட்ட கூழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பழனிவேல் மற்றும் கழகத் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்