புதுவை அரசு ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து மாதம் இரண்டு சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை புரிந்து காரைக்கால் வாழ் பொது மக்களுக்கு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருவதன் தொடர் நிகழ்வாக வயிறு, குடல் சம்பந்தமான சிகிச்சைகள் மற்றும் வயிறு குடல் அறுவைச் சிகிச்சை (Medical gastroentrology and surgical gastroentrology. ) சம்பந்தமாக சிறப்பு மருத்துவர்கள் வருகை புரிந்து சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இதில் ஏராளமான காரைக்கால் வாழ் பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ பயன் பெற்றார்கள்