காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதிக்கு உட்பட்ட ஆற்றங்கரை தெருவில் வசித்து வரும் பிரபாகரன் அவர்களின் வீடு மழையால் பாதிக்கப்பட்டு வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததால் அவரது மகன் வாசுதேவன் காயமடைந்த நிலையில் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனை நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்கள். மேலும் தேவைப்படும் உதவிகளை செய்வதாகவும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் உறுதி அளித்தார்கள்.