போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக ஏகன் கலைக்கூடம் சார்பில் சென்னை மாத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுமார் பத்து வயது முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் மற்றும் மாணவியர்கள் என 50 பேர் கலந்து கொண்டு 120 நிமிடங்கள் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி ஐரோப்பியன் உலகசாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.
ஆகன் சிலம்பம் கலைக்கூடம் துணைத்தலைவர் ஜாக்குலின்மேரி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஐரோப்பியன் உலக சாதனை புத்தகத்தின் இயக்குனர் சதாம்உசேன் கலந்து கொண்டு சாதனை புரிந்த மாணவர்களுக்கு சான்றிதழையும் ,கேடயங்களையும் வழங்கினார். இதில் கிரான்ட் மாஸ்டர் ஆப் .சி. எஸ். கே நிறுவனர் முத்துக்குமார் , தீபா மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் சிலம்பம் போட்டியை ஆசிய கோப்பையில் இணைக்க இந்திய அரசும் தமிழக அரசும் ஆவண செய்ய வேண்டும் என கேட்டு கொண்டனர்.