கூடலூர் நகராட்சி சார்பில் லோயர் கேம்பில் ரூபாய் 40 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் துவக்கி வைத்தார்
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கூடலூர் நகராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்டது லோயர் கேம்பில் உள்ள அம்பேத்கர் காலனி இந்த காலனியில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் சமுதாய கூடம் சேதமடைந்து
இருந்தது இதை யடுத்து அந்த பழமை வாய்ந்த சேதம் அடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டுமென அப் பகுதி பொதுமக்கள் நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்
இந்தக் பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து நகர மன்ற தலைவர் பத்மாவதி லோகந் துரை நகராட்சி ஆணையாளர் கே எஸ் காஞ்சனா பொறியாளர் பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆலோசனையின் படி 15 ஆவது மத்திய குழு மானிய நிதி 2023. 2024 திட்டத்தின் கீழ் சமுதாயக்கூடம் கட்ட ரூபாய் 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை லோயர் கேம்ப் அம்பேத்கர் காலனியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் பத்மாவதி லோகந் துரை தலைமை வகித்தார்
ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் முன்னிலை வகித்து பூமி பூஜையை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் பன்னீர்செல்வம் துணைத்தலைவர் சி. காஞ்சனா மற்றும் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது எங்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி ரூபாய் 40 லட்சத்தில் சமுதாயக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுத்த நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் பொறியாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். விழா நிறைவில் கூடலூர் திமுக நகர செயலாளரும் நகர் மன்ற உறுப்பினரும் நகர் மன்ற தலைவரின் கணவருமான லோகந்துரை நன்றி கூறினார்.